ஏய் சம்பாதித்த பணத்தை கொடு… விஜயாவிடம் விழிபிதுங்கி நிற்கும் ரோகினி..
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா ரோகினியை கொத்தடிமை போன்று நடத்துவதுடன், அவரது ஏடிஎம்- கார்டையும் வாங்கி வைக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்துள்ளது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது பயங்கரமாக கொடுமைபடுத்துகின்றார்.
இதுவரை விஜயாவின் கொடுமையை மீனா மட்டும் அனுபவித்து வந்த நிலையில், தற்போது ரோகினியும் அனுபவித்து வருகின்றார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ரோகினி மேக்கப் வேலை செய்து வருகின்றார். அங்கு வந்த வருமானத்தை விஜயா தருமாறு கேட்கின்றார்.
அதற்கு ரோகினி தனது அக்கவுண்டில் உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு விஜயா ஏடிஎம்-கார்டை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.