நள்ளிரவில் அலறிய மாமியார்.. மரண பயத்தை காட்டிய மருமகள்? – திடீர் திருப்பம்..!
வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கிற மாதிரியே மாமியார் மருமகள் சண்டை எல்லா குடும்பத்திலயும் இருக்கதான் செய்யுது ஆனா பிரச்சனைகளை பொழுது போக்கு மாதிரி கடந்து போறதுக்கு பதிலா அதுக்கு நிரந்தர முடிவு கட்டணும்னு நினைச்சாங்கன்னா இதோ இந்த சம்பவம் மாதிரி கூட நடக்க வாய்ப்பு இருக்கு கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கி நிற்க உலகத்தில் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது சார் என கரகரத்த குரலில் நடந்த சம்பவத்தை விவரித்து கொண்டிருந்தான் இந்த குடும்பஸ்தன் சத்தியமா உலகத்துல எங்கயுமே நடக்கக்கூடாது என் நெக போனாலே சரி ஓகே போன போயிருவாரு ஆனா எங்க அம்மால அடிச்சு இந்த பக்கம் சத்தியமா உடம்பே கூடாது கட்டிய மனைவி பெற்ற தாயை கொலை செய்ய முயன்று இருக்கிறார் என்றால் அதனை எந்த மகனால்தான் தாங்கி கொள்ள முடியும் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள செய்தியாளர் செங்குட்டவனை விசாரணையில் களமிறக்கினோம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள மண்டலவாடி பகுதி இங்குள்ள இந்த சிறிய வீட்டில்தான் 70 வயதான கிருஷ்ணனும் அவருடைய 55 வயதான மனைவி கனகாவும் வசித்து வந்திருக்கிறார்கள் சென்ற மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவில் முதியவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென வீட்டின் கதவை தட்டும் சப்தம் கேட்டிருக்கிறது இந்நேரத்தில் யார் வந்தது என தூக்க கலக்கத்தில் எழுந்து கதவை திறந்த கனகாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய ஒரு மருமநபர் பெட்ஷீட்டால் மூதாட்டியின் முகத்தை மூடி கொலைவெறி தீர கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார்
இதில் படுகாயம் அடைந்த கனகா அலறியபடி சுருண்டு விழவும் அந்த மர்மநபர் கனகா அணிந்திருந்த நான்கு சவர நகையோடு எஸ்கேப் ஆகி உள்ளார் நடந்த சம்பவம் தொடர்பாக விழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் கொள்ளை அடிக்க வந்த நபர் வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்ததும் அவர் கொலை ஆயுதங்களை எடுத்து வராததும் காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது வயதான முதியவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்தான் இந்த சம்பவத்தை செய்திருக்க வேண்டும என மூதாட்டியின் மகன் ஆறுமுகத்திடமும் மருமகள் வசந்தியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள் அதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு நடந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது அதோடு வசந்தி தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவலையே தெரிவித்து வந்ததால் அவரிடம் மட்டும் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள் அதன் பிறகுதான் மருமகளே ஸ்கெட்ச் போட்டு மாமியாரை கொலை செய்ய முயன்றிருப்பது தெரிய வந்திருக்கிறது ஆம் மாமியாரால் தான் தன்னுடைய வாழ்க்கையில் வசந்தமே இல்லாமல் போய்விட்டதென வசந்தி நினைத்திருக்கிறார் புகுந்த வீட்டில் தனக்கு நடக்கும் கொடுமைகளை மாமன் மகன் மைக்கேல் ராஜ் என்பவரிடம் எமோஷனலாக தெரிவித்து எமோஜியில் கண்ணீர் வடித்திருக்கிறார்
ஒரு கட்டத்தில் முறைப்பெண்ணின் கஷ்டங்களை கேட்டு மெல்ட்ான மைக்கேல் வசந்தியிடம் இனி எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இருவரும் சேர்ந்து கனகாவின் கதையை முடிக்க பிளான் போட்டிருக்கிறார்கள் அதன்படி சம்பவம் நடந்த சென்ற 31ஆம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து கனகா வீட்டிற்கு சென்ற மைக்கேல் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ஆத்திரம் தீர கட்டையால் ஓங்கி அடித்திருக்கிறார் கனகா பேச்சு மூச்சின்றி மயங்கி விழவும் அவரை இறந்துவிட்டதாக நினைத்து அவர் அணிந்திருந்த நான்கு சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றிருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது ஆனால் கனகாவிற்கு ஆயுல் கெட்டியாக இருந்ததால் அவர் மருமகளின் சதிக்கு பலியாகாமல் உயிர் பிழைத்திருக்கிறார் நடந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தியையும் அவருடைய மாமன் மகன் மைக்கேல் ராஜையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கட்டிய மனைவி பெற்ற தாயையே கொலை செய்ய துணிந்து விட்டதால் இனி வசந்தி தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையே இல்லை என ஆறுமுகம் மரண பயத்தோடு திருவித்திருப்பது அனைவரையும் பரிதாபப்பட வைத்திருக்கிறது