டாடிகளே குறி..’ – மொத்தத்தையும் உருவிய அழகிய பிசாசு – அதிர வைக்கும் க்ரைம்..!
ரெண்டு வயசு பையன ஸ்கூல்ல விட போனப்ப கிண்டர் கார்டன் டீச்சர் கிட்ட கிண்டலா பேசி பழகி இருக்காரு எங்க ஒரு டாடி நார்மலான உரையாடல் அண்ட் ஸ்டப்னு தொடங்குன இந்த ரிலேஷன்ஷிப் இப்ப அவருக்கே பேக்ஃயரான ஸ்டோரி இது சேலையில் அவள் வானவில் மாடர்ன் டிரஸ்ஸில் வேற லெவல் இவள் பார்க்கும் பார்வையில் பாதணிகள்ஃயர் ஆகும் இவளுடன் பேசி பழகினால் ஹார்ட் பீட் தெரிக்கும் இப்படி சாத்வீகம் பிரசோதகம் பயானகம் என ஒரு உடலுக்குள் மூன்று ஷேட்ஸை சங்கமித்து வைத்திருக்கும் இந்த மாயாவியின் பெயர் ஸ்ரீதேவி ருத்தகி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வந்திருக்கிறார்.
என்னதான் ப்ரொபஷன் ஆசிரியராக இருந்தாலும் இன்ஸ்டாவில் அவருடைய ப்ரொபைல் வேற மாதிரியான வைபில் உள்ளது ஸ்ரீதேவி போடும் ஒவ்வொரு போஸ்ட்டம் பாட்காஸ்ட் ரேஞ்சுக்கு வைரல் ஆகும் இவருடைய கிளாமர் ஆப்பிள் டாப் டக்கர் என ரேட்டிங்கில் முந்தும் யாதும் ஊரே என இவர் போகும் டெஸ்டினேஷன் ஒவ்வொன்றும்ஃேவரட் ஸ்பாட்டாக டெவலப் ஆகும் இவர் ஆடும் நாட்டியம் ஹெட்லைன்ஸ் ஸ்டோரி இவர் பார்ட்டிக்கு போனால் அதுதான் ஃபாலோவர்ஸ்களின் பிரேக்கிங் நியூஸ் இப்படி 24/7 ஸ்ரீதேவியே உலகம் என நினைத்து அவரையே சுற்றிக் கொண்டிருந்த நபரை தான் அந்தப் பெண் கடத்தி படம் பறிக்க முயன்று தற்போது ஏழரையில் மாட்டி இருக்கிறார் இன்ஸ்டா சென்சேஷன் குற்ற சரித்திரத்திற்கு வந்த பின்னணியை அனலைஸ் செய்ய நம்முடைய பெங்களூர் டிடெக்டிவ் பாரதி ராஜாவை விசாரணையில் களமிறக்கினோம்.
இன்ஸ்டா ராணியிடம் இதயத்தை பறிகொடுத்தவரின் பெயர் ராகேஷ் பெங்களூரில் தொழிலதிபராக உள்ள ராகேஷ் அவருடைய இரண்டு வயது மகனை ஸ்ரீதேவி வேலை பார்க்கும் கிண்டர் கார்டன் பள்ளியில் சேர்த்திருக்கிறார் அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது ஸ்ரீதேவியின் அழகில் மயங்கிய ராகேஷ் தனக்கு திருமணமாகிவிட்டதையே மறந்து அந்த பெண்ணை பிளர்ட் செய்திருக்கிறார் ஸ்ரீதேவியும் ராகேஷ் ஒரு குழந்தைக்கு டாடி என்பதை மைண்ட் பண்ணாமல் ஃப்ரீயாக பழகியுள்ளார் இருவரும் அடிக்கடி இன்ப சுற்றிலாக்களுக்கு சென்று மியூச்சுவலாக அன்பை பரிமாறி வந்திருக்கிறார்கள் இந்த சூழலில் தான் ஸ்ரீதேவி தனக்கு அவசரமாக நான்கு லட்சம் தேவைப்படுவதாக ராகேஷிடம் கேட்டிருக்கிறார் .
ஆசை நாயகி கேட்ட அடுத்த நொடியே ராகேஷும் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார் ஆனால் நாளாக நாளாக ஸ்ரீதேவி ராகேஷ் உடனான பிரெண்ட்ஷிப்பை குறைத்திருக்கிறார் இதனால் கடுப்பான ராகேஷ் கொடுத்த பணத்தை செட்டில் செய்துவிட்டு பிரேக்கப் செய்து கொள்ளுமாறு டீல் பேசி இருக்கிறார் இதை கேட்டதும் ஈவலாக மாறிய ஸ்ரீதேவி ராகேஷிடம் அவர் கொடுத்த ஒவ்வொரு முத்தத்திற்கும் தலா 50ஆய சர்வீஸ் சார்ஜ் என கூறி ட்ரூ கலரை வெளிப்படுத்தியுள்ளார் அதோடு இருவரும் தனிமையில் இருக்கும்போது ராகேஷ் எத்தனை முத்தங்கள் கொடுத்துள்ளார் என்பதை கூட்டி கழித்து டாடியிடம் நீதான் மேற்கொண்டு 19 லட்சம் தனக்கு தர வேண்டும் என கரார் காட்டி இருக்கிறார் இதனால் அதிர்ந்து போன ராகேஷ் ஸ்ரீதேவியை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு அவருடைய போனையும் உடைத்து போட்டுள்ளார் ஆனால் ஸ்ரீதேவி ராகேஷை விடுவதாக இல்லை அவருடைய மனைவிக்கு போன் செய்து பள்ளியில் பையன் பயங்கரமாக சேட்டை செய்வதால் அவருடைய டாடியை என்குயரிக்கு வரச் சொல்லி இருக்கிறார் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ராகேஷும் கோபமாக பள்ளிக்கு வந்துள்ளார் அப்போது ஸ்ரீதேவியின் காதலன் சாகர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கணேஷ் ஆகியோர் சேர்ந்து ராகேஷை காரில் கடத்தியுள்ளனர்.
ராகேஷிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம் இல்லையென்றால் ஸ்ரீதேவியோடு தனிமையில் இருந்த நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என ராகேஷ் தெருவுத்துள்ளார் உடனே மனம் இறங்கி வந்த ஸ்ரீதேவி கொடுத்த முத்தத்திற்காக 19 லட்சத்தை மட்டும் செட்டில் செய்துவிட்டு கிளம்புமாறு லாஸ்ட் சான்ஸ் கொடுத்திருக்கிறார் இதற்கு சம்மதித்த ராகேஷ் அவர் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 90ஆயிரம் பணத்தை வித்ட்ரா செய்து கொடுத்துள்ளார் மிச்ச பணத்தையும் விரைவில் செட்டில் செய்து விடுவதாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த கும்பல் அவரை விடுவித்திருக்கிறார்கள்.
கடத்தல் கும்பலிடமிருந்து எஸ்கேப் ஆன ராகேஷ் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதேவி அவரின் காதலன் சாகர் மற்றும் ரவுடி கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீதேவியை பயன்படுத்தி மேலும் பல குழந்தைகளின் டாடிகளிடம் இந்த கேடி கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது ஸ்ரீதேவியின் ஹனி ட்ராப்பில் எத்தனை டாடிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்.