மீண்டும் திருமணம் செய்துகொள்வேன்!.”ஆனா! ஒரு கண்டிஷன் இருக்கு”.. ரகசியத்தை உடைத்த ரேணு..!! - Seithi Murasu

Seithi Murasu

No 1 trending News

Seithi Murasu

No 1 trending News

CINEMA

மீண்டும் திருமணம் செய்துகொள்வேன்!.”ஆனா! ஒரு கண்டிஷன் இருக்கு”.. ரகசியத்தை உடைத்த ரேணு..!!

முன்னாள் நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேணு தேசாய் தனது திருமண ஆசை குறித்து மனம் திறந்து பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக அறியப்படும் பவன் கல்யாணுக்கும் முன்னாள் நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேணு தேசாய்க்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அகிரா என்ற மகனும் ஆத்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இதை எடுத்து கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் இருவரும் பிரிந்தனர் பவனுக்கும் ரேணுவுக்கும் விவாகரத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும் ரேணு மறுதிருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு ரேணு அளித்த பேட்டியில் தான் ஏன் விவாகரத்திற்கு பிறகு மறு திருமணம் செய்து கொள்ளவில்லை

தனக்கு நடந்த நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல முக்கியமான தகவல்களை மனம் திறந்து உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார் அதுதான் தற்போது தெலுங்கு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ரேணுவிடம் திரைத்துறையில் நடிகையாக தற்போது தயாரிப்பாளராக சாதித்துக் கொண்டிருக்கும் நீங்கள் வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்று விரும்புகிறீர்களா என அவரிடம் கேட்கப்பட்டதற்கு தனக்கு விருப்பம் இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் இருப்பினும் தனது இரண்டு குழந்தைகள் மீதான பொறுப்புணர்வுதான் ஒரு புதிய உறவை ஏற்படுத்த தடுக்கிறது என கூறிய அவர் எனது பார்வையில் மட்டும் பார்த்தால் ஆம் எனக்கு ஒரு காதலன் இருக்க வேண்டும் எனக்கு ஒரு திருமணம் இருக்க வேண்டும் எனக்கு ஒரு வாழ்க்கை துணை இருக்க வேண்டும் ஆனால் குழந்தைகளின் பார்வையில் இருந்து பார்க்கும்போது அது தவறாக மாறலாம் என கூறியிருக்கிறார் தொடர்ந்து பேசிய ரேணு விவாகரத்து ஆன பிறகு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்தேன் அதை தொடர்ந்து 2018ல் எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் அது பாதியில் நின்று போய்விட்டது நான் தனியாக குழந்தைகளை வளர்த்து வருகிறேன்

ஒருவரை மணந்து அவர்களுடன் குழந்தைகள் பெறுவது என்பது வேறு ஆனால் ஒருவருடன் குழந்தைகள் பெற்ற பிறகு வேறொருவரை திருமணம் செய்து கொள்வது முற்றிலும் வேறு விதமான விஷயம் என உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார் மேலும் பேசிய ரேணு எனது மகள் ஆத்தியா வளர நான் காத்திருக்கிறேன் எனவும் அவளுக்கு இப்போது 15 வயதாகிறது ஒருவேளை அவளுக்கு 18 வயதாகி கல்லூரிக்கு செல்லும்போது மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து யோசிப்பேன் எனவும் ரேணு கூறியிருக்கிறார் பவன் கல்யாண் ரேணு தேசாயை திருமணம் செய்து கொள்வதற்கு முன் நந்தினி என்பவரை 1997ல் திருமணம் செய்து கொண்டார் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் விவாகரத்து செய்தார் அதை தொடர்ந்து தான் நடிகையாக இருந்த ரேணு தேசாவை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார்

பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012ல் இருவரும் பிரிந்தனர் பிறகு அடுத்த ஆண்டே ரஷ்ய நடிகை அண்ணா லெஜேனாவாபாய் திருமணம் செய்து கொண்ட பவன் கல்யான் தற்போது அவருடன் தான் வாழ்ந்து வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ரேணு தேசாய் தான் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து நவீன மருந்துகள் உடலை உயிருடன் வைத்திருக்கின்றன என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார் இதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.