மகளுடன் நிச்சயம்.. மாமியாருடன் கல்யாணம்.. மாப்பிள்ளை வேற ரகம்..! - Seithi Murasu

Seithi Murasu

No 1 trending News

Seithi Murasu

No 1 trending News

NEWS

மகளுடன் நிச்சயம்.. மாமியாருடன் கல்யாணம்.. மாப்பிள்ளை வேற ரகம்..!

மகளின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தனது வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ரக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அவரது தாய் சில காலங்களாக மாப்பிள்ளை தேடி வந்துள்ளார் அதைத் தொடர்ந்து அதே மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெண்ணின் தாயார் முடிவு செய்திருக்கிறார்

பின்னர் இரு வீட்டாரும் கலந்து பேசி ஏப்ரல் 16 ஆம் தேதி மணமக்களுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர் அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு அழைப்பிதர்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர் இதற்கிடையில் திருமண வேலைக்காக மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் இதனால் மணமகனும் மாமியாரும் நெருக்கமாகி உள்ளனர் தொடர்ந்து பிறகு தன்னுடைய வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கி தந்துள்ளார்

புது செல்போன் கைக்கு வந்ததுமே மருமகன் மாமியார் இரண்டு பேரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்து வந்துள்ளனர் ஒரு கட்டத்தில் மாமியார் மருமகன் உறவு திருமணம் தாண்டிய காதலாக மாறியுள்ளது கல்யாண ஏற்பாடுகள் சம்பந்தமாக இருவரும் பேசி வருவதாக இரு வீட்டாரையும் நம்ப வைத்திருக்கின்றனர் திருமண வேளையில் உறவினர்கள் மிகவும் பிசியாக இருந்ததால் இந்த விவகாரம் மணப்பெண்ணுக்கோ மணமகனின் குடும்பத்தினருக்கோ தெரியவில்லை திருமண தேதி நெருங்கி கொண்டே இருந்த நிலையில் மாமியார் மருமகன் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் அதன்படியே திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மகளுக்காக கல்யாணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள் பணத்தையும் எடுத்துக்கொண்டு மருமகனுடன் பெண்ணின் தாய் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

அழைப்பிதல்கள் வழங்குவதற்காக தாய் வெளியே சென்றிருப்பதாக அவரது மகளும் உறவினர்களும் நினைத்தனர் பிறகு இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்துள்ளனர் அப்போது அதிலிருந்த நகை பணம் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மணமகனின் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என சென்ற மணப்பெண்ணின் உறவினர்களுக்கு மற்றொரு பேர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது

மணமகன் வீட்டில் அவரை தேடிக்கொண்டிருந்தனர் இதற்கிடையே தங்களை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என இருவரும் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கின்றனர் அப்போதுதான் இருவருக்கும் இடையே இருந்த உறவு குறித்து அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது இதனால் இரண்டு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்னும் ஒரு வாரத்தில் மகளுக்கு கல்யாணம் உள்ள நிலையில் வருங்கால மருமகனுடன் மாமியார் ஓடி போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது