மாட்டிக்கினாரு ஒருத்தரு... காப்பாத்தமாட்டாரு கர்த்தரு கைதான ஜான்ஜெபராஜ்..! - Seithi Murasu

Seithi Murasu

No 1 trending News

Seithi Murasu

No 1 trending News

NEWS

மாட்டிக்கினாரு ஒருத்தரு… காப்பாத்தமாட்டாரு கர்த்தரு கைதான ஜான்ஜெபராஜ்..!

கொஞ்ச நெஞ்ச ஆட்டமா ஆடுன புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இந்த பையனை விடாதீங்க சார் என இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்பரிப்போடு நுழைந்த மகிழ்ச்சியை கொண்டாடி தீர்க்கும் அதே குறுத்தோழை ஞாயிறு கொண்டாட்ட நாளில்தான் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் போதகர்களும் எக்கால சத்தமுழங்க ஆர்பரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பிராபல போதகர் ஜான் ஜவராஜ் கைதை பொதுவாக கிறிஸ்தவ பாதிரியார்கள் இது போன்ற வழக்குகளில் கைதாகும்போது இது சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட புகார் பாதிரியார் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார்

என்றெல்லாம் கண்டன அறிக்கைகள் வரும் ஆனால் கண்டன அறிக்கைகளுக்கு பதிலாக குதுகலம் கொண்டாட்டமே என பாதர் பெர்கமான்சிஸன் கிறிஸ்தவ பாடலை பாடி குதுகல ஆட்டமாடிக் கொண்டிருக்கிறார்கள் போதகர்கள் பலரும் என்ன காரணம் ஜான் ஜவராஜ் கேஸ் ஹிஸ்டரியை காவல்துறை தூண்டிய போதுதான் அவர் ஆடிய ஆட்டம் அப்படி என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன தென்காசி சூரக்கோட்டையை சேர்ந்தவர்தான் 37 வயது கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் ஆங்குள்ள அரசு பள்ளியில் கடந்த 2005 வரை படித்த பின் சதன் ஆசியா பைபிள் கல்லூரியில் படித்ததாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து லெவி மினிஸ்ட்ரீஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி அதனை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ் கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார் அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஆண்டில் இருந்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது அப்பா கிறிஸ்தவர் அம்மா முஸ்லிம் திருமணத்திற்கு பிறகு தாயும் மனம் திரும்பி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டதால் கிறிஸ்தவராக வளர ஆரம்பித்துள்ளார் ஜான் ஜபராஜ் ஆனால் எந்த பிரபல போதகர் ஜான் ஜெபராஜுக்கு அடைக்கலம் கொடுத்தாரோ அந்த வீட்டிலேயே தனது விளையாட்டை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

இதனால் அந்த போதகரின் மகள் இதுவரை திருமணமே ஆகாமல் பெங்களூரில் இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் சாதி காரணமாக துரத்தப்பட்டேன் எனக் கூறிக்கொண்டு இன்னொரு போதகரிடம் தஞ்சம் புகுந்துள்ளார் ஜான் ஜபராஜ் இதனை தொடர்ந்து பைபிள் காலேஜ் பாஸ்டர் ட்ரைனிங்கிற்கு எல்லாம் அவர்தான் உதவினாராம் ஆனால் அவரையும் மதிக்காமல் நடந்து கொள்ள ஆரம்பித்ததால் அங்கிருந்தும் துரத்தப்பட்டுள்ளார் ஜான் ஜவராஜ் இதனைத் தொடர்ந்து நான் துரத்தப்பட்டேன் வெறுத்து ஒதுக்கிட்டாங்க என்னை ஓரங்க கட்டுறாங்க என மக்கள் மத்தியில் சிம்பத்தி கிரியேட் செய்து பாடல்களை பாட ஆரம்பித்துள்ளார்

மேலும் தனது சினிமா ஸ்டைல் பாடல்களால் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரபலம் அடைய ஆரம்பித்துள்ளார் ஜான் ஜெபராஜ் இதனால் இளம் வயதிலேயே கிடைத்த ஓவர் பப்ளிசிட்டி அவரை தலைகால் புரியாமல் ஆட வைத்தது பரிசுத்த இடமாக நடத்த வேண்டிய சபையை பாட்டு கச்சேரி மேடை போல் ஆக்கிவிட்டார் என பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள் வயது முதிர்ந்த பாதிரியார்களை கூட பொதுமேடையில் இருந்தபடி அவன் இவன் என மரியாதை இல்லாமல் கடுமையாக விமர்சிப்பது கேளிக்கிண்டல் செய்வது எதிர்க்கிறவர்களை எல்லாம் ஐடிவிங் போன்ற ஒரு டீமை உருவாக்கி அவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது என ஈடுபட ஆரம்பித்தார் மேலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டவும் செய்துள்ளார் இதனால் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் இயேசுவின் ராஜ்யத்துக்கு பதிலாக ஜான் ஜெபராஜ்யத்தையே உருவாக்கி ஆட்டம் போட்டுள்ளார்

இந்த நிலையில்தான் தன்னுடைய ஆலயத்தில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்த அவரது நண்பருக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதாவது நீ எங்கெங்கேயோ இப்படி நடந்திருக்க இப்போ எனது மனைவியிடமே இப்படி நடந்துக்க ஆரம்பிச்சிட்டியா என ஜான் ஜெபராஜ் சண்டை போட்டுள்ளார் அவரது நண்பர் மேலும் வீடியோ ஆதாரங்களை கொண்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு இவரே எல்லை மீறியதாகவும் சற்றை எழுந்ததால் 1500 பேர் வந்த சர்ச் இரண்டாக உடைந்ததாகவும் கூறப்படுகிறது இதனால் அப்போதே தென்காசியில் போய் ஜான் ஜவராஜ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது இதனால் மனைவிக்கும் இவருக்கும் விவாகரத்து செய்யும் அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில்தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேறு திருமணத்துக்கும் தயாராகி இருக்கிறார்

ஜான் ஜவராஜ் எனவும் கூறப்படுகிறது கேரளாவில் இருந்து வந்த இன்னொரு லேடியுடனும் நட்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது இப்படி புகார் மேல் புகார் சர்ச்சை மேல் சர்ச்சை என ஜான் ஜவராஜை சுற்றுப் போட ஆரம்பித்தது இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஜான் ஜவராஜ் வீட்டில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின் போது தனது மாமனாரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும் 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி தற்போது ஜான் ஜவராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார் தனிப்படை போலீசார் நெல்லை தென்காசி கன்னியாகுமரி பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஜான் ஜெபராஜை தேடி வந்தனர் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்கள் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது

போலீஸ் கைது செய்யாமல் இருக்க ஜான் ஜெவராஜ் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார் அதில் நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தூண்டுதலின் பெயரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக பொய் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் இந்த மனு வருகிற 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த சூழலில்தான் கேரள லேடியின் உதவியுடன் மூணாறு பகுதியில் பதுங்கியிருந்த ஜான் ஜவராஜை இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர் கோவை காந்திபுரம் மத்திய அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோவை ஆர்.எஸ்புரம் பாரஸ்புரம் பகுதியில் உள்ள நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஜான் ஜெபராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்

இதனை அடுத்து அவரை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் மாட்டிக்கினார் ஒருத்தர் காப்பாற்ுவார் கர்த்தர்னு ஜான் ஜவராஜின் ஆதரவாளர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயமாக அவர் செய்த பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கர்த்தர் காப்பாற்றவே மாட்டார் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.