சினிமா

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை ஓடிப்போய் தடுத்த ராதிகா..!

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா ஜூன் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயதுமூப்பு காரணமாக தனது 84வது வயதில் காலமானார் இவரது இறுதி சடங்கு ஜூன் 11ஆம் தேதி நடந்தது இந்த இறுதி சடங்கில் குடும்பத்தினரை கங்கை அமரன் மீடியா முன்னிலையில் திட்டி உள்ளார் மேலும் பாரதிராஜாவின் மகள் மற்றும் மருமகளுக்கிடையில் சண்டையும் வந்துள்ளது.

இது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது, உறவினர்களுக்குள் பிரச்சனை இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு மனோஜ் மற்றும் ஜனனி என இரு பிள்ளைகள் உள்ளனர் இதில் மனோஜிற்கு 2006 ஆம் ஆண்டு நடிகை நந்தனாவுடன் திருமணம் நடைப்பெற்றது இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் மனோஜ் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிசடங்கில் பாராதிராஜாவின் குடும்பத்தை கங்கை அமரன் “கடைசி காலத்தில் அனாதையா விட்டுட்டீங்களே என்று ஊடகங்கள் இருப்பது கூட பொருட்படுத்தாமல் திட்டி விட்டார்.

பின்னர் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா உடலை பார்க்க வந்து அங்கேயே கதறி அழுதார். அப்போதும் இப்ப எங்க வந்த கடைசி காலத்துல அவர விட்டுட்டல்ல. என்று கேட்டார் இது குறித்து கங்கை அமரனிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்ட போது,அவர் அது எங்கள் குடும்பத்தினருக்குள் இருக்கும் விஷயம். அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது” என்றார் இப்படி ஒரு பக்கம் இருக்க பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மனோஜின் மனைவி தனது மகள்களுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் அப்போது பாரதிராஜாவின் மகள் அங்கே வந்து  அவரை எழுந்திருக்க சொன்னதும், அப்பாேது அவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் நடந்தது இது கேமராவிலும் பதிவானது. அதோடு பாரதிராஜாவின் மகள் தனது நாத்தனார் கையை பிடித்து இழுக்க முயன்றார் அவர் அதனை தட்டிவிட்டார்.

இந்த பிரச்சனை பெரிதாகப்போகிறது என்பதை நடிகை ராதிகா சுதாரித்து அங்கே சென்று  பாரதிராஜா மகள் ஜனனியை கையெடுத்து கும்பிட்டு சமாதானம் செய்தார்.

இத்தனை பிரச்சனையும் கேமரா முன்னே நடந்தது பதிவாகி சமூக வலைத்ளங்களில் பரவியதால் பொதுமக்கள் இணையவாசிகள் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர் மனோஜ் மறைவிற்கு பிறகு பாரதிராஜா தன்னுடைய மகள் வீட்டில் இருந்துள்ளார் அவருடைய மகள் மலேசியா பாரதிராஜா மலேசியா இருந்து வந்த பின்னர் அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போயுள்ளது பாரதிராஜாவும் அவருடைய பேத்திகளும் அவ்ப்போது சென்று பாரதிராஜாவை பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *